Wise Quotes
- VIKASH ACHUTARAMAIAH

- Nov 28, 2021
- 1 min read
Updated: Mar 1, 2024
வாழ்க்கையை சிறப்பாக வழி நடத்துவதற்கும், போராட்டங்களைக் கையாள்வதற்குமான சிறந்த கூறுகள்:
நாம் அவசரப்படும் போது, தொல்லைகளையே வரவேற்கிறோம்.
நம்மிடம் இல்லாதவற்றில் கவனம் செலுத்தினால், அது துயரை மட்டுமே நமக்குத் தரும்.
அடுத்த கணம் என்ன நடக்குமென்பதை நம்மால் கட்டுப்படுத்த இயலாது, ஆயினும் எப்புயலையும் தாங்கும் மனோபாவத்தை நாம் வளர்த்துக் கொள்ளலாம்.
நமக்குத் நாமே தலைமை ஏற்போம்; சூழ்நிலைகள் நம்மை திணறடிக்க விடாமலிருப்போம்.
நம்மிடமிருந்து உலகிற்கு பல விடயங்கள் தேவைப்படுகின்றன. ஆயினும், நம் தேவையென்னவோ அதில் கவனம் செலுத்துவதே நம் மிகப்பெரிய சாதனை.
கடினமான வேலையிலேயே நாம் முதலில் கவனம் செலுத்துதல் வேண்டும்.
பிரமை ஒரு மனநலக் கோளாறு. அது நலமின்மையையே நமக்கு ஏற்படுத்தும்.
சிறு விடயங்களுக்காக நாம் கவலைப்படுவதை விடுத்து, வெளியே சென்று களிப்புறுவோம்.
உண்மையில் நாம் பலமுறை தோல்வியுற்று இருந்தாலும், மகிழ்ச்சியான மற்றும் நேர்மறையான மனநிலையுடன் இப்போது முயற்சிப்போம். நாம் நிச்சயம் தோல்வியடைய மாட்டோம்.
நம் அமைதிக்கான மற்றும் மகிழ்ச்சிக்கான பயணங்கள் பெரும்பாலும் தவறான பாதையிலேயே நம்மை எடுத்துச் செல்கிறது. இப்பயணத்திற்கான சரியான பாதை உள்முகம் தான், வெளிமுகம் அல்ல.
பேரின்பம் என்றும் நம்மிடமே இருக்கின்றது, ஆனால் துரதிர்ஷ்டவசமாக, நாம்தான் அதை உணருவதே இல்லை.
நாம் நம்மை நம்பவில்லை எனில் வெற்றி நம்மைத் தவிர்க்கும்.
நாம் எங்காவது தொடங்கத்தான் வேண்டும். ஆரம்பத்தில் நாம் தோல்வியடையலாம். ஆனால், யார்தான் தோல்வியடையவில்லை? ஆகவே நிறுத்த வேண்டாம். நம் ஒவ்வொரு தோல்வியும் நமது இலக்கை அடைவதற்கான ஒரு படிக்கல்.
போராட்டங்களில் இருந்து யாரும் தப்ப முடியாது. எல்லா மக்களும் அதைக் கடந்துதான் வருகிறார்கள். எனவே சமூகத்தில் பலருடன் பழகி, அவர்களின் போராட்டங்களைப் பற்றி அறிந்து கொள்வோம். நம் போராட்டங்களைப் பற்றி அவர்களிடம் பகிர்வோம். பிறர்க்கு ஊக்கமளித்து நாமும் ஊக்கமடைவோம்.
நம் சௌகரியமான பிரதேசத்தை விட்டு வெளியேற, நாம் தயாராக இல்லையென்றால், அதன் விளைவுவாக பல பொன்னான வாய்ப்புகளை நாம் இழப்போம்.
சிறு இலக்குகளை நாம் அமைத்துக் கொள்வோம். அனைத்தையும் ஓரிரவில் அடைய நாம் முயற்சிக்க கூடாது.
Note - Source unknown. Translated in Tamil by me.







Comments