Prayer-Introspection-Realization
- VIKASH ACHUTARAMAIAH

- Dec 20, 2021
- 1 min read
Updated: Mar 1, 2024
வழிபாடும்.... தன்னாய்வும்... சுயபரிணாமமும்.. ஞானோதயமும்.
1. முடிவற்ற ஆசைகளின் சங்கிலியிலிருந்து என்னை விடுதலை செய்வாய். அதனால், நான் முழுநிறைவுடன் நிம்மதியாக வாழ்வேன்.
2. சிற்றின்ப வேட்கை எனும் இருளிலிருந்து என் மனதை விடுவிப்பாய்.
தெய்வீக அன்பின் ஒளியால் என் ஆன்மாவை நிரப்புவாய்.
3. உண்டுகளிப்பதற்கும், பொய்யான வெளியுலகில் மனம் போனபடியும், இச்சைப்படியும் மட்டுமே நடக்க நான் வாழ வேண்டாம். உண்டு, பரிணமித்து, வளர்ந்து என் மெய்யான உள்நிலையை உணர்ந்து வாழ அருள்வாய்.
4. பிறரை காயப்படுத்தும் ஏவுகணைகளாய் சொற்களை, நான் பயன்படுத்த வேண்டாம்.
ஆறுதலிளிப்பதற்கும் நிவாரணமளிப்பதற்கும் சொற்களை, நான் பயன்படுத்த அருள்வாய்.
5. கண்ணாடி போல் உடைந்து நொறுங்கக் கூடியது என் வாழ்விடம் என்பதை நான் மறக்காமல் இருக்க வேண்டும் .
நான் காணும் இடமெங்கும் கற்களை எறியாமல் இருக்க அருள்வாய்.
6. புலமை தரும் கர்வத்தில் இருந்து என்னை விடுவிப்பாய்.
இறை அறிவால் என் மனதை தெளிவிப்பாய்.
7. என் ஆணவத்தின் பிணைப்பிலிருந்து என் சுயத்தை பிரித்தெடுப்பாய். ஆதலால் 'நான்' என்றும் வேறற்றதாவேன்.
8. பிறரின் நற்செயல்கள் என்றென்றும் அவர்கட்கு வரையறையற்ற மகிழ்ச்சியைக் தர அருள்வாய்.
என் ஆன்மாவை ஒன்றானதும் எல்லாமுமானதுடன் இணைப்பாய்.
9. உன் தாமரைத் திருவடிகளில் சரண் புக என்னைத் தூண்டுவாய். எனவே நான் துன்பத்தைக் காணாமல், அய்யன் உன் திருநடத்தை என் காலில் நின்று காண்பேன்.
10. எந்த செயலையையும் நான் வெகுமதிக்காகவும் புகழுக்காகவும் செய்யாமல் இருக்க வேண்டும். என் ஒவ்வொரு செயலும் உன் உயர் நாமத்திற்கே சமர்ப்பணம் செய்ய அருள்வாய்.
11. என் மனச் சலம்பலை அகற்ற எனக்கு உதவுவாய். அதனால் நான் மனதில் உன் திருநாமத்துடன் எந்நேரமும் இணைந்திருப்பேன்.
12. என் அகவயமான மனதை வளப்படுத்தவும், பாதுகாக்கவும் எனக்கு உதவுவாய்.
என் புறவயமான மனதை வடிகட்டவும, நற்திசைக்குத் திருப்பவும் எனக்கு உதவுவாய்.
13. விருப்பு வெறுப்புகளைக் கையாள எனக்கு உதவுவாய். ஆகவே நான் பற்றற்று, சமநிலையுடன், என்றும் கலக்கமின்றி இருப்பேன்.
14. முடிவில், உன்னை அடைய நீ எமக்கருளும் போது, எனது சுற்றத்தார் புடை சூழ வர தயை கூர்ந்து என்னை அனுமதிப்பாய்.
Note: - Source unknown. Translated in Tamil by me.







Comments