Blood Donation
- VIKASH ACHUTARAMAIAH
- Jun 12, 2022
- 1 min read
Updated: Mar 1, 2024
குருதிக்கொடை
சங்கத்தமிழ்கூர் வள்ளல்கள் முதலிடைகடை
காலமின்னும் சொல்கிறது இவர்க்கொடை
இவரெல்லரும் வாழ்த்துமொர் உயர்க்கொடை
அறிதாமுயிரை எளிதாய் காக்குமிக்கொடை
இரத்தமின்றி வாடுமுயிர்க்கு உயிர்க்கொடை
மகத்தான மனிதநேயமே இதற்கு அடிப்படை
அதுவே கொடையி லுயர்ந்த குருதிக்கொடை
விலைமதிப்பே அற்றது குருதிக்கொடை
தன்னார்வச் சேவையே குருதிக்கொடை
மானுடத்தைக் காத்திடும் குருதிக்கொடை
மானுடப்பற்றை வளர்க்கும் குருதிக்கொடை
உயிர்காக்க செய்திடுவோம் குருதிக்கொடை
Comments